• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

பட்டாசு தொழிற்சாலை!

Wednesday, March 4, 2009 3 comments

எத்தனை பாரதிகள்!
எத்தனை கலாம்கள்!
எத்தனை சச்சின்கள்!
எத்தனை கல்பனா சாவ்லாக்கள்!

முளையிலே கிள்ளிவிட்ட
கருகிய மொட்டுக்களாய்
கண்களில் ஈரத்துடன்,

ஒலிம்பிக்கின் எதிர்கால மெடல்களும்
ஒழுகிய மூக்குடன்,

வெடிமருந்தின் நிழலிலே
வாடிய முகத்துடன்,
வாழ்க்கையை தொலைத்துவிட்ட
வேதனையில் வெறுப்புடன்,

பிஞ்சுக்குழந்தையின்
பஞ்சுகை செய்த
பட்டாசும் மத்தாப்பும்
வானில் பறக்கும் ராக்கெட்டும்
வண்ணமய வெடிகளும்
வேண்டாமே எனக்கென்றும்!

இயலாது என்னால்
இனியும் வெடிவெடிக்க!



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum