தமிழ்த்தொலைக்காட்சி ஒன்றை,
தாத்தாவின் அருகில் இருந்து
தற்செயலாய் பார்க்கலானேன்!
தொலைக்காட்சி பெயர் தமிழில்!
தமிழ்க்கொலைதான் நிகழ்ச்சிகளில்!
அலைவரிசை மாற்றிப்பார்த்தேன்!
அனைத்திலும் கொலைதான்!
நிழல் மட்டும் தமிழாய்!
நிகழ்ச்சியெல்லாம் கழிவாய்!
பொறுத்திருக்க முடியாது,
பொறுமினார் தாத்தா!
"பாரதியும் அவர்தாசனும்
பட்டுக்கோட்டை வகையராவும்
கட்டிக்காத்த தமிழ் இன்று
கந்தலாகிக்கிடக்குதிங்கே!"
தலைதொங்கி வருந்தியே,
தொலைக்காட்சி அணைத்துவிட்டேன்
திருத்துதற்கு வழியின்றி!
எதிர்வீட்டு சிறுமிவந்து
மறைத்துவைத்த மீன்களை
மகிழ்ச்சிபொங்க காட்டியே,
"FISH" என்று சொன்னாளே!
மீனருகில் சென்ற என்மகள்
மழலை மொழி மாறாமல்,
"மீமீ" என்று மறுத்தாளே!
மெல்லிய புன்னகை தூவி -என்
மகளை நோக்கிய தாத்தா!
"FISH" என்றாள் எதிர்வீட்டாள்!
"மீமீ" என்றாள் என்வீட்டாள்!
தாத்தாவின் புன்னகை
பெரிதாகிப்போனது!
"FISH" என்றாள்!
"மீமீ" என்றாள்!
வாய்விட்டு சிரித்தார்
வயதான தாத்தா!
தாத்தாவின் மகிழ்ச்சிதனில்
நம்பிக்கையின் ஒளிக்கீற்று!
தாத்தாவின் அருகில் இருந்து
தற்செயலாய் பார்க்கலானேன்!
தொலைக்காட்சி பெயர் தமிழில்!
தமிழ்க்கொலைதான் நிகழ்ச்சிகளில்!
அலைவரிசை மாற்றிப்பார்த்தேன்!
அனைத்திலும் கொலைதான்!
நிழல் மட்டும் தமிழாய்!
நிகழ்ச்சியெல்லாம் கழிவாய்!
பொறுத்திருக்க முடியாது,
பொறுமினார் தாத்தா!
"பாரதியும் அவர்தாசனும்
பட்டுக்கோட்டை வகையராவும்
கட்டிக்காத்த தமிழ் இன்று
கந்தலாகிக்கிடக்குதிங்கே!"
தலைதொங்கி வருந்தியே,
தொலைக்காட்சி அணைத்துவிட்டேன்
திருத்துதற்கு வழியின்றி!
எதிர்வீட்டு சிறுமிவந்து
மறைத்துவைத்த மீன்களை
மகிழ்ச்சிபொங்க காட்டியே,
"FISH" என்று சொன்னாளே!
மீனருகில் சென்ற என்மகள்
மழலை மொழி மாறாமல்,
"மீமீ" என்று மறுத்தாளே!
மெல்லிய புன்னகை தூவி -என்
மகளை நோக்கிய தாத்தா!
"FISH" என்றாள் எதிர்வீட்டாள்!
"மீமீ" என்றாள் என்வீட்டாள்!
தாத்தாவின் புன்னகை
பெரிதாகிப்போனது!
"FISH" என்றாள்!
"மீமீ" என்றாள்!
வாய்விட்டு சிரித்தார்
வயதான தாத்தா!
தாத்தாவின் மகிழ்ச்சிதனில்
நம்பிக்கையின் ஒளிக்கீற்று!