எழுப்போசை ஒலித்ததுமே
எழுந்துவிட்டேன் உறக்கம் கலைத்து!
பள்ளிப்படிப்பு முடிந்து
பத்தாண்டு ஆனபின்னும்
எட்டிக்கூட பார்த்ததில்லை
நான் படித்த பள்ளியினை!
வெள்ளிவிழாக்கொண்டாட்டம்,
வரவேண்டி அழைப்பிதழ்!
வேகமாய் புறப்பட்டேன்
விழாவினை சிறப்பிக்க!
வாசலருகே வந்ததும்,
செவிகளில் ரீங்காரமிட்ட
சேரனின் பாடல்கள்!
"அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..."
"ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே....."
மைக்செட் முருகனது
மகனாகப்பிறந்தவன் நான்!
மகன்படிக்க வேண்டுமென,
மெட்ரிக்குலேசன் பள்ளியிலே
அனுப்பிவைத்து
அழகுபார்த்தார்!
பகல்பொழுதில் பள்ளியிலும்
ஓடியாடி இரவுகளில்
ஒலிப்பெருக்கி கட்டுவதும்
வாடிக்கையாய்ப்போனகாலம்!
பாரங்களை அதிகரித்த,
பத்தாம் வகுப்பு வந்தேன்!
அரையாண்டுத்தேர்வு நேரம்!
சட்டமன்றத்தேர்தல் நேரம்!
ஒலிப்பெருக்கி தேவையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் வந்தநேரம்!
கடுமையாய் உழைத்திருந்தும்
குறைந்திருந்த மதிப்பெண்கள்!
நானொருவன் பெயிலானால்,
தேர்ச்சி விகிதம் குறைந்திடுமாம்!
"இனி நீங்கள் படிக்க வேண்டாம்"
இருபது பேர் துரத்தப்பட்டோம்!
.................
அருகிலே வந்தொருவர்,
அதிகாரத்தொனியிலே,
"மந்திரி வர நேரமாச்சி
மைக்செட்டைப்போடு தம்பி"
நினைவுகளை
நிறுத்திவைத்து,
மைக்செட்டை போட்டுவிட்டு,
மந்திரியின் பேச்சைக்கேட்க
மதிலருகே நின்றிருந்தேன்!
அனல்பறந்த
அமைச்சர் பேச்சு!
"நூறு சதம் தேர்ச்சிபெற
செய்யவேண்டியது என்னவென்று
சொல்லித்தாருங்கள் எங்களுக்கும்!
செயல்படுத்த துடிக்கின்றோம்,
மாநகராட்சி பள்ளியிலும்!"
உண்மைகள் புதைத்து
பொய்யாய் சிரித்தது
சுவரொட்டியின்
வண்ணவாசகம்!
"இருபத்தைந்து ஆண்டுகளாக 100% தேர்ச்சி"
எழுந்துவிட்டேன் உறக்கம் கலைத்து!
பள்ளிப்படிப்பு முடிந்து
பத்தாண்டு ஆனபின்னும்
எட்டிக்கூட பார்த்ததில்லை
நான் படித்த பள்ளியினை!
வெள்ளிவிழாக்கொண்டாட்டம்,
வரவேண்டி அழைப்பிதழ்!
வேகமாய் புறப்பட்டேன்
விழாவினை சிறப்பிக்க!
வாசலருகே வந்ததும்,
செவிகளில் ரீங்காரமிட்ட
சேரனின் பாடல்கள்!
"அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..."
"ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே....."
மைக்செட் முருகனது
மகனாகப்பிறந்தவன் நான்!
மகன்படிக்க வேண்டுமென,
மெட்ரிக்குலேசன் பள்ளியிலே
அனுப்பிவைத்து
அழகுபார்த்தார்!
பகல்பொழுதில் பள்ளியிலும்
ஓடியாடி இரவுகளில்
ஒலிப்பெருக்கி கட்டுவதும்
வாடிக்கையாய்ப்போனகாலம்!
பாரங்களை அதிகரித்த,
பத்தாம் வகுப்பு வந்தேன்!
அரையாண்டுத்தேர்வு நேரம்!
சட்டமன்றத்தேர்தல் நேரம்!
ஒலிப்பெருக்கி தேவையெல்லாம்
ஒட்டுமொத்தமாய் வந்தநேரம்!
கடுமையாய் உழைத்திருந்தும்
குறைந்திருந்த மதிப்பெண்கள்!
நானொருவன் பெயிலானால்,
தேர்ச்சி விகிதம் குறைந்திடுமாம்!
"இனி நீங்கள் படிக்க வேண்டாம்"
இருபது பேர் துரத்தப்பட்டோம்!
.................
அருகிலே வந்தொருவர்,
அதிகாரத்தொனியிலே,
"மந்திரி வர நேரமாச்சி
மைக்செட்டைப்போடு தம்பி"
நினைவுகளை
நிறுத்திவைத்து,
மைக்செட்டை போட்டுவிட்டு,
மந்திரியின் பேச்சைக்கேட்க
மதிலருகே நின்றிருந்தேன்!
அனல்பறந்த
அமைச்சர் பேச்சு!
"நூறு சதம் தேர்ச்சிபெற
செய்யவேண்டியது என்னவென்று
சொல்லித்தாருங்கள் எங்களுக்கும்!
செயல்படுத்த துடிக்கின்றோம்,
மாநகராட்சி பள்ளியிலும்!"
உண்மைகள் புதைத்து
பொய்யாய் சிரித்தது
சுவரொட்டியின்
வண்ணவாசகம்!
"இருபத்தைந்து ஆண்டுகளாக 100% தேர்ச்சி"