மானாட மயிலாட, தேனாட குயிலாட போன்ற ரியாலிட்டி(?!?) நிகழ்ச்சிகள், மொழி பேதமின்றி பல தொலைக்காட்சிகளிலும் இன்று வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் வெறும் பொழுதுபோக்கையும் டி.ஆர்.பி. ரேட்டிங்கையுமே குறிவைத்து நடத்தப்படுபவை என்பது உலகறிந்த செய்தியாயினும் நம் anaivaraiyum ஈர்த்து ஓரிடத்தில் கட்டிப்போடவே செய்கிறது.
தொலைக்காட்சி என்பது பொழுதுபோக்கு சார்ந்ததுதான் என்கிற எண்ணம் நம் மனதில் ஆழ பதியத்துவங்கிய காலமிது. சினிமாவையும், சுயசார்புடைய அரசிலையும் பேசவே இன்றைக்கு தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயம், மாணவர்-இளைஞர் நலன் இவையெல்லாம் கருத்தில்கொள்ளப்படுவதே இல்லை.
சமீபத்தில் மலையாள தூர்தர்சனில் "கிரீன் கேரளா எக்ஸ்பிரஸ்" என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியினை தூர்தர்சனும் கேரளா அரசும் இணைந்து துவக்கி இருக்கின்றன.
மக்களுக்கு பயன்படும்படியான நல்ல திட்டங்களை செயல்படுத்திய, செயல்படுத்துகிற சிறந்த பஞ்சாயத்துக்களை தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்ச்சி.
இதில் 999 கிராம பஞ்சாயத்துகளும், 57 நகராட்சிகளும், 5 மாநகராட்சிகளும் பங்குபெறுகின்றன.
நிகழ்ச்சியின் சில துளிகள்:
இந்த நிகழ்ச்சி, ஆங்காங்கே செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களை நாடறியச்செய்யவும், அவற்றை மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்லவும் நிச்சயம் பயன்படும்.
நிகழ்ச்சியின் இணையத்தளம் :
http://www.greenkeralaexpress.org/

- வெள்ளமுடா என்கிற ஒரு கிராமத்தில் கடந்த 28 ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதே இல்லையாம். கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்ததாம். கிராம பஞ்சாயத்தின் மூலமாக கடந்த இரண்டாண்டுகளாக மாணவர்களுக்கு இலவச புத்தகம், பை, குடை, உடை, முறையான போக்குவரத்து வசதி, காலையும் மதியமும் உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், இந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சிபெற்றதாகவும் சொல்கிறார்கள்.
- அடட் என்கிற பஞ்சாயத்தில் இருக்கிற 2500 ஹெக்டரிலும் எந்தவித இரசாயன மருந்தும் பயன்படுத்தாத இயற்கை வழி விவசாயம் செய்வதாகவும், அந்த கிராம மக்களாலேயே கண்டுபிடிக்கப்பட்ட "அடட் அரிசி" என்கிற புதிய வகை அரிசியை வெளி சந்தையிலும் விற்கப்படுவதாகவும் அறிகிறோம்.
- எலப்புல்லி என்கிற கிராமத்தில் தேவையான அனைத்து அரசுத்துறை நிறுவனங்களையும் இணைத்து ஒரு கூட்டுறவு பால் பண்ணை துவங்கி இருக்கிறார்கள். இதிலே கல்வியாளர்களும் சுகாதாரத்துறையினரும் அடக்கம். இதன் மூலம் பால் உற்பத்தி பல மடங்கு பெருகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
- நிலம்பூர் என்கிற கிராமத்தில் 3000 திருமணமாகாத இளைஞர்கள் வரதட்சணையே வாங்காமல் திருமணம் செய்யப்போவதாக உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.
- குடப்பனக்குன்னு என்கிற கிராமத்தில் விவசாய தொழிற்நுட்ப மையத்தை உருவாக்கி அறிவியல் பூர்வமான பல மாற்றங்களை விவசாயத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள்.
- கொரட்டி என்கிற கிராமத்தில் 670 வீடுகளின் கழிவுகளை இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். மேலும் வெகு சீக்கிரத்தில் அந்த கிராமம் முழுவதும் இதனை செயல்படுத்தப்போவதாக உறுதி பூண்டிருக்கிறார்கள்.
- மடிக்கை என்கிற கிராமத்தில் நிலத்தடி நீர் மற்றும் மழை நீரை சேமிக்க ஆராய்ச்சியுடன் கூடிய பல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதன்மூலம் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.