• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

ஒரு வார்த்தை....

Monday, August 30, 2010 0 comments

பிரம்மாண்ட கட்டிடத்தில்
பாலிடெக்னிக் கல்லூரி!

இருக்கும் பணத்தை கையிலெடுத்து,
இடம் கிடைக்குமா மகனுக்கு - என
இருகைகள் கட்டியே,
வரிசையில் நின்றேன்
விவரம் கேட்க!

ஐ.டி. பிரிவில் சேர்வதற்கு,
ஐம்பதாயிரம் நன்கொடையாம்!
கோடியிலா புரள்கிறோம்,
கொடையெல்லாம் கொடுப்பதற்கு!

கல்லூரி முதல்வரின்
கால்களை பிடித்துக்கெஞ்ச
வாய்ப்பொன்று கிடைக்குமா
வினவினேன்.... வேண்டினேன்...

கைகாட்டிய திசைநோக்கி
கதவுதிறந்து உள்நுழைந்தேன்!

மாலைபோட்ட வெங்கடாசலபதி,
முதல்வரின் தலைக்குமேலே!

கையினாலே எழுதிவைத்த,
ஒருவார்த்தை சற்றுகீழே!

வார்த்தையைப்பார்த்ததும்,
வார்த்தையேதும் பேசாமல்,
"என்ன வேண்டும்?" எனக்கேட்ட
முதல்வர் குரலும் கேளாமல்
முகம்வாடி வெளியேறினேன்!

அந்த வார்த்தை - "லாபம்"



சொல்ல மறந்த கதை

2 comments

பத்தாம்வகுப்பு முடித்துவிட்டு
பாலிடெக்னிக் வந்திருக்கேன்!

அதிகமதிப்பெண் பெறாவிடினும்
ஆங்கிலப்பள்ளி படிச்சிருக்கேன்!

வகுப்பு துவங்கி நடக்கையிலே,
வேகமாய் ஓடியொருவன்,
வந்தமர்ந்தான் என்னருகில்!

எங்கு படித்தாய்
எனக்கேட்டால்,
அரசுப்பள்ளி எனச்சொன்னான்!

நானூற்றைம்பது மதிப்பெண்ணாம்!
கணக்கிலே முழுநூறாம்!

வகுப்பினிறுதியில்
"கெமிஸ்ட்ரி வாத்தியார்
ஆங்கிலத்திலேயே நடத்துறாரே
ஒண்ணுமே புரியல" - என்றான்!

"கெமிஸ்ட்ரி இல்லடா இது
கம்ப்யூட்டர் வகுப்பு"
கேலிக்குரலுடன் மற்றொருவன்!

தமிழிலிருந்து ஆங்கிலம்,
தள்ளாடித்தடுமாறிய சிலர்,
திரும்பவில்லை கல்லூரிக்கு!

மொழிதுரத்திய அவர்கள்,
எங்குபோயினர்? என்னவாயினர்?



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum