• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

காதலென்று....

Tuesday, March 15, 2011 2 comments

 மெய்யெழுத்தையும் பொய்யெழுத்தையும்
கிறுக்கிவைத்த கையெழுத்தையும்
கவிதையென்று தலைப்பிட்டால்
காதலென்று பொருளோ!!!
 
--பழைய பக்கங்களிலிருந்து....



இது வெறும் விளையாட்டுதானே...

Monday, March 14, 2011 1 comments


ஆயிரமாயிரமாய் கூட்டம்
அரங்கினில் அமர்ந்திருக்க,
கோடிகோடியாய் மக்கள்
வீடுகளில் காத்திருக்க,
பாரதத்தின் பெருமைகாக்க
பதினொருவராய் வந்து
மைதான மையத்தில் நிற்க,
உரக்க ஒலிக்கத்துவங்கியது
இந்தியாவின் தேசியகீதம்!!!

இவர்களுக்கு நாட்டுப்பற்றா?

'பெப்சி'யென்றும் 'கோக்'கென்றும்
அந்நிய அசுரன்களின்
அல்லக்கைகளாய் விளம்பரங்களில்!
பெட்டிங்கென்றும் பிக்சிங்கென்றும்
பெட்டிகளாய் கருப்புகளில்!
தேசப்பற்றென்று சொல்லியே
தேசமெங்கும் சொத்துகள்!
வேறென்னசெய்தாய் நாட்டிற்கு?
வெறும்தொழில்தானே கிரிக்கெட்டும்?

கோபம் கொப்பளித்து
கொதிப்படையும் வேளையிலே
அருகாமை நண்பனொருவன்
அரசுதந்த டி.வி. முன்பு
செங்குத்தாக எழுந்துநின்று
செலுத்திக்கொண்டிருந்தான்
சொந்த(!)நாட்டின் தேசப்பற்றை!!!



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum