இன்றைய பெரும்பாலான தனியார் பள்ளிகள் இப்படித்தான் இருக்கிறது. இங்கே குறிப்பிட்டிருக்கிற பள்ளியில் வெளிப்படையாக சொல்லிவிட்டார்கள். மற்றபள்ளிகளில் சொல்லவில்லை என்பதைத்தவிர வேறெந்த வேறுபாடுகளும் இல்லை.
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அந்த மக்களின் கல்வியின் மூலம் தீர்மானிப்பதே எளிதானதும் நிரந்தரமானதுமாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் என்று எவற்றையெல்லாம் நாம் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறோமோ அங்கெல்லாம் கல்வி என்பது எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாகவே இருக்கிறது.
நம்முடைய நாடுகளில் என்ன நிலை?
1 . காசுள்ளவனுக்கே தரமான(?) பள்ளிக்கல்வி
2 . காசுள்ளவனுக்கே உயர்கல்வி
3 . காசுள்ளவனுக்கே பொறியியல், தொழிற்நுட்பம், மேலாண்வியல், மருத்துவம் போன்றவை
4 . ஒன்றாம் வகுப்பு செல்லும் ஒவ்வொரு 100 மாணவர்களில் வெறும் 6 முதல் 10 பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்வதாக ஆய்வறிக்கைகள் சொல்கிறது
இப்பள்ளிகள் எல்லாம் என்ன செய்கிறது?
1 . அரசாங்கம் எவ்வளவு வசூலிக்கவேண்டுமென்று சொல்கிறதோ அதைவிட மிக மிக அதிகமாகவே வசூலிப்பது,
2 . வசூலிப்பது ஒரு தொகையும், பில்லில் வேறு ஒரு தொகையும் இருப்பது,
3 . பாதியில் பணம் கட்டமுடியாமல் தவிக்கிறவர்களை எந்த தயவுதாட்சண்யமுமின்றி பள்ளியைவிட்டே வெளியே அனுப்புவது,
இவ்வாறு வியாபாரம் என்பதைத்தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாதவர்கள் இவர்கள்...
'காசுதான் முக்கியம், அதற்காக என்ன செய்தாலும் தவறில்லை' என்பதைத்தான் இந்த தனியார் பள்ளிகள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு கற்றுத்தருகின்றன.
பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

இவ்வருத்தங்களையும் கோபங்களையும் விவாதங்களையும் செயல்வடிவமாக்கி மிக வலிமையாக எதிர்க்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது...