• 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்... (சிறுகதை)

    "எங்க ஸ்கூல்ல ஹாப்பி பர்த்டே போட்டில கூட நாந்தான் ஜெயிப்பேன் தெரியுமா?" என்றபோதுதான் எங்களுக்கெல்லாம் ஒண்ணுமே புரியல.

  • நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

    நம்முடனே வாழும் சகமனிதனை மனிதன் என்கிறவகையில் பார்க்காமல், இனம்-மொழி-தேசம்-நிறம்-சாதி-மதம் என்று விதவிதமாக வேற்றுமைவார்த்தைகளைப் பயன்படுத்தி அவனைக்கொன்று குவிப்பதற்குப்பெயர் தேசியவாதமென்றால், அப்படிப்பட்ட தேசியமும் தேசமும் எல்லைக்கோடுகளும் தகர்த்தெறியப்படட்டும்...

  • காசும் கல்வியும்...

    பாடசாலைகளை பணம் பண்ணும் தொழிலாக மாற்றுவது, ஒட்டுமொத்த சமூகத்தையுமே தவறான வழிக்குதான் இட்டுச்செல்லும்.

  • ஏதாவது செய்யணும்னே... (சிறுகதை)

    மக்கள் விரோத அரசுகளுக்கு ஒரு கதாநாயகன் போதாது....

  • முதலாளி...

    மெதுமெதுவாய் நானும் முதலாளியாகிக்கொண்டிருந்தேன்!

செல்லமகள்...

Wednesday, June 15, 2011 2 comments

செல்லமகளை தூங்கவைக்க
மெல்ல முதுகில் தட்டியபடி,
வாயில்வந்த பாடலினை
தாளம்தப்பிப்பாடியபடி,
நிமிடங்கள்சில கடப்பதற்குள்
நானே கண்ணயர்ந்தேன்!

கனவுகளுக்குள்ளும் நுழைந்தநேரம்
கன்னத்தை அழுத்துகிற உணர்வொன்று
மெதுமெதுவாய் எழுப்பிவிட
மெல்லகண்களை விரித்துப்பார்க்கையில்,
முத்தம் கொடுத்துவிட்டு
முகத்தை விலக்கிக்கொண்டு
எந்தன் நெஞ்சினில்தட்டியபடியே,
  "தூங்குப்பா தூங்கு...
   தூங்குப்பா தூங்கு...
   தூங்குப்பா தூங்கு..."
சொல்லிக்கொண்டிருந்தாள்
செல்லமகள் என்னருகே!

உறக்கம் கலைந்தாலும்
விழித்த என் கண்களை
வேகமாக மூடிக்கொண்டேன்...



 
சிந்தன் © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum